சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-05 21:02 GMT
சூரமங்கலம்,
பொது மேலாளர் ஆய்வு
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் நடைமேடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் புதிய பேட்டரி கார் ஒன்றை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். 
இதனையடுத்து ரெயில் நிலைய வளாகம் மற்றும் நடைமேடைகளை ஆய்வு செய்தார். அங்கு பயணிகளுக்காக செய்யப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், ரெயில் நிலையத்தில் தண்டவாள பாதைகளில் உள்ள லெவல் கிராசிங் பகுதிகளை ஆய்வு செய்தார். 
பாராட்டு
பின்னர் ரெயில் நிலையத்தில் ஆய்வை முடித்து கொண்டு கோட்ட அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் ரெயில்கள் எவ்வாறு பாதுகாப்பாக இயக்கப்படுகிறது? என்பது குறித்தும், சரக்கு ரெயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்தும் கேட்டறிந்தார். 
சரக்கு போக்குவரத்து மூலம் கூடுதலாக வருமானத்தை ஈட்டுவதற்கான வழிமுறைகளை கூறினார். மேலும் ரெயில்வே கோட்டத்தின் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து அவர் சிறப்பாக பணியாற்றிய கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் பி.சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்