கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை

பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-02-05 20:28 GMT
விருதுநகர், 
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
பள்ளிகள் திறப்பு 
கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு அனைத்து பள்ளிகளையும் திறந்து அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அரசு பஸ்களையே நம்பி உள்ள நிலையில் பள்ளி நேரங்களில் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை தொடர்கிறது.
ஆபத்தான பயணம் 
 இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் கிராமப்புற வழித்தடங்களில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 அதே நேரத்தில் மாணவர்களும் பஸ்களின்படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்ய வேண்டியதும் அவசியமாகும். அப்போது தான் தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும். 

மேலும் செய்திகள்