விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
விருதுநகர் அருகே விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 23). இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. தனியார் நூற்பு ஆலையில் வேலை பார்க்கும் சதாம் உசேன் ஆவுடையாபுரத்தில் இருந்து குப்பாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆர்.ஆர்.நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் நூர்ஜகான் (40) கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.