தேவதுர்க்கை அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், தேன், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.