ஆதரவு கடிதத்தை திரும்ப பெற்றதால் தி.மு.க. பெண் வேட்பாளர் சாலைமறியல் செய்ய முயற்சி

ஆதரவு கடிதத்தை திரும்ப பெற்றதால் போடியில் தி.மு.க. பெண் வேட்பாளர் ஆதரவாளர்களுடன் சாலைமறியல் செய்ய முயன்றார்.

Update: 2022-02-05 14:21 GMT
போடி:
போடி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில்‌ 27-வது வார்டில் தி.மு.க. சார்பில் முருகம்மாள் என்பவர் போட்டியிட நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்‌. அப்போது அவர் வைத்திருந்த கட்சி சின்னத்துக்கான ஆதரவு கடிதத்தை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் திரும்ப வாங்கி சென்றுவிட்டனர். இதனால் அவரால் கட்சியின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்க இயலவில்லை. 
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை 4 மணி அளவில் போடி பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்ய முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 
முருகம்மாளுக்கு தி.மு.க. ஆதரவு கடிதம் இல்லாததால் அவர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. எனவே சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 

மேலும் செய்திகள்