பூந்தமல்லி அருகே பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது

பூந்தமல்லி அருகே முன்னால் சென்ற பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 15க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-02-05 04:41 GMT
சென்னை

திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் 15க்கும் மேற்ப்பட்டோர் வேலை முடிந்து வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் மாடுகள் கடந்ததால் முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டது, அதன் பின்னால் ஆற்காடு நோக்கி சென்ற அரசு பேருந்தும் பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் பேருந்து மீது மோதியதில் வண்டியின் முன் பகுதி  பலத்த சேதமடைந்தது. இதில் முன்னால் அமர்ந்திருந்த டிரைவர் உட்பட மூன்று பேர் பலத்த காயத்துடன் போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்களுக்கு லேசான காயத்துடன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பகுதியில் மின் விளக்கு இல்லாததாலும் சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் கடந்து செல்வதாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்