மது குடிக்க மனைவி பணம் தராததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

பளுகல் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-04 21:42 GMT
களியக்காவிளை:
பளுகல் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 டிரைவர் 
 பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இளஞ்சிறை, வடக்கேகரை மேலிர்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 60), டிரைவர். இவருக்கு சரஸ்வதி (58) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து சென்னையில் விசித்து வருகிறார்கள். மணிகண்டனுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
 இதனால், மது குடிக்க பணம் கேட்டு  மனைவியிடம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். சரஸ்வதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருவதால், மேலிர்கோட்டையில் மணிகண்டன் தனியாக வசித்து வந்தார்.
 மேலும், தனக்கு மது குடிக்க பணம் அனுப்பவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை மணிகண்டன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
 தற்கொலை
 இந்தநிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் விஷம் குடித்து விட்டு வீட்டில் கூச்சலிட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்தத்னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். 
 இதுபற்றி தகவல் அறிந்த பளுகல் போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்