கேரளாவை தொடர்ந்து பெங்களூருவிலும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் கண்டுபிடிப்பு
கேரளாவை தொடர்ந்து பெங்களூருவிலும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலும் குழு உருவாக்கி செயல்பட்டது அம்பலமாகி உள்ளது. இதில் மூளையாக செயல்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
மனைவிகளை மாற்றி உல்லாசம்
கேரளா மாநிலம் கோட்டயம் சங்கனாச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் தன்னை மற்றவர்களுடன் உறவு கொள்ளும்படி வற்புறுத்துவதாக கூறியிருந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ‘கபுள்ஸ் மீட்’ என்ற பெயரில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழுக்களை உருவாக்கி, அவரவர் விருப்பப்படி மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கேரள மாநில போலீசார் 7 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ெபங்களூருவிலும் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் கேரளாவை தொடர்ந்து கர்நாடக தலைநகா் ெபங்களூருவிலும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெங்களூருவில் ‘ஒய்ப் சாப்பிங்' என்ற பெயரில் டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழு செயல்பட்டது வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு மூளையாக வினய் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
இதில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க விரும்புபவர்கள் மட்டும் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அந்த சமூக வலைத்தள குழுவில் தம்பதி மற்றும் பெண்கள் என பலரது புகைப்படம் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதில் தங்களுக்கு விருப்பமான பெண்ணைகளை தேர்வு செய்து உல்லாசம் அனுபவிக்கலாம். அதேபோல், அந்த நபரும் தனது மனைவியை பிறருடன் உல்லாசம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கவில்லை என்றால் அந்த நபர் குழுவை விட்டு நீக்கப்படுவார்.
வாலிபர் கைது
இந்த நிலையில், ‘ஒய்ப் சாப்பிங்’ குழு பற்றி பெங்களூரு தெற்கு மண்டல போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தெற்கு மண்டல போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ‘ஒய்ப் சாப்பிங்’ குழுவில் மூளையாக செயல்பட்ட வினய் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
காதல் தம்பதி
அந்த விசாரணையில், வினய், பெங்களூருவில் உள்ள பிரபல எலெக்ட்ரானிக் கடையில் வேலை வந்துள்ளார். வினயும், அவரது மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் முதலில் தனது மனைவியை வைத்து இந்த குழுவை வினய் செயல்படுத்த தொடங்கினார். இதற்கு நல்ல வரவேற்பும், அதிகளவு பணமும் கிடைத்ததால், மேலும் சில காதல் தம்பதியை இந்த குழுவில் இணைந்துள்ளார்.
கணவர் கண் முன்னே உல்லாசமாக இருப்பது அல்லது ஒரே அறையில் பலர் ஜோடியாக உல்லாசம் மேற்கொள்வது இந்த குழுவின் முக்கிய அம்சம் ஆகும்.
மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கலாசாரம் ெவளிநாடுகளில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த கலாசாரம் இந்தியாவிலும் தலைத்தூக்க தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.