தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளை பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டிவிட்டனர்.

Update: 2022-02-04 20:18 GMT
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளை பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டிவிட்டனர்.
தோட்டத்தில் புகுந்த யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
மல்லன்குழி கிராமத்தை ஒட்டி மானாவாரி விவசாய நிலம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 1 மணி அளவில் 3 யானைகள் புகுந்தன. இதை பார்த்த அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
விவசாயிகள் விரட்டிவிட்டனர்
அதன்பேரில் விவசாயிகள் அங்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து சென்றன.
இரவு நேரத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்த யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் விவசாய தோட்டங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை கண்காணிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்