எலிக்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

எலிக்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-04 19:54 GMT
வேப்பந்தட்டை:

தண்ணீர் பாய்ச்ச சென்றார்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள மூலப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் போஜன். இவரது மகன் ரஞ்சித் (வயது 20). விவசாயியான இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேலக்குணங்குடி கிராமத்தில் ராசம்மாள் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச  சென்றார். அப்போது அருகில் உள்ள ஒரு வயலில் எலி தொல்லைக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்