கொங்கணாபுரத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
எடப்பாடி,
கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பருத்தி வரத்து அதிகரித்ததால் நேற்று ஏலம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 500 மூட்டைகள் 1,100 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 599 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 973 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 900 முதல் ரூ.14 ஆயிரம் வரை ஏலம் போனது. இன்று (சனிக்கிழமை)யும் ஏலம் நடைபெற உள்ளது.
இதே போல நேற்று கொப்பரை தேங்காய் ஏலமும் நடந்தது. மொத்தம் 120 மூட்டைகள், 40 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் முதல் தர கொப்பரை கிலோ ரூ.82.40 முதல் ரூ.90.10 வரையும், 2-ம் தர கிலோ ரூ.66.20 முதல் ரூ.81.35 வரை விற்பனையானது.