சரக்கு ஆட்டோ மோதி முதியவர் பலி

காரியாபட்டி அருகே சரக்கு ஆட்ேடா மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-02-04 19:41 GMT
அருப்புக்கோட்டை,
காரியாபட்டி அருகே தோப்பூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் சமையல் பணிக்காக அதே ஊரை சேர்ந்த பாண்டி (வயது 74) என்பவரும் உடன் சென்றார். இந்தநிலையில்  சேதுராஜபுரம் அருகே குளித்துவிட்டு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற  பாண்டி மீது சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்