டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

நெல்லை அருகே டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-04 19:31 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நடராஜன் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்