சீர்காழியில், வாக்கு எண்ணும் மையத்தை உதவி கலெக்டர் ஆய்வு
நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில், வாக்கு எண்ணும் மையத்தை உதவி கலெக்டர் நாராயணன் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில், வாக்கு எண்ணும் மையத்தை உதவி கலெக்டர் நாராயணன் ஆய்வு செய்தார்.
உதவி கலெக்டர்ஆய்வு
சீர்காழி நகர்மன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து சீர்காழி நகர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளி, சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, வி.டி.பி. நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை உதவி கலெக்டர் நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராஹிம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
அடிப்படை வசதிகள்
மேலும் வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின் போது தாசில்தார் சண்முகம், ஆய்வாளர் பொன்னியின் செல்வன், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.