பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: தலைமறைவாக இருந்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது
ஆரணி அருகே ஊராட்சி மன்ற தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணி அருகே ஊராட்சி மன்ற தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
பெட்ரோல் குண்டு வீசி கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மருசூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி செந்தாமரை. கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் செந்தாமரைக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த தருமன் மகன் மதியழக் என்பவருடன் கள்கக்காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு சுந்தரமூர்த்தியை, அவரது மனைவி செந்தாமரை, கள்ளக்காதலன் மதியழகனுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தாமரை, அவரது கள்ளகாகதலன் மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்காதலனுடன் மனைவி கைது
இந்தவழக்கு விசாரணை ஆரணி கோர்ட்டில் நடந்து வருகிறது. ஜாமீனில் வெளியே வந்த செந்தாமரையும், மதியழகனும் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். 10 ஆண்டுகளாக இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளனர். இதனால் கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின்படி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் மேற்பார்வையில், ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் செந்தாமரை உள்பட இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர்.
அப்போது அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை அருகே நாராயணபுரம் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் செந்தாமரை, மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.