திருவலம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
திருவலம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவலம்
திருவலம் அருகே உள்ள சேவூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 62). அரசு மருத்துவமனை ஓய்வுபெற்ற ஊழியர். இவர் தனது மனைவி ராணியுடன் (51) நேற்று முன்தினம் இரவு சேவூரில் உள்ள சந்தைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் இருந்தவர் முகத்தை துணியால் மூடியிருந்தார். அவர்கள் திடீரென ராணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்த புகாாின் பேரில் திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்துக்கொண்டு தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.