கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
காவேரிபாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பிள்ளையார்குப்பம் கூட்ரோடு அருகே சென்றபோது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சதீஷை வழி மடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன், 500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து சதீஷ் பாணாவரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்- இன்ஸ்பெக்டர் மேசிட் மற்றும் போலீசார் இன்று பாணாவரம் அருகே ரங்காபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரக்கோணம் அருகே உள்ள வேடல் பகுதியை சேர்ந்த கருணாகரன் (27), வெங்கடேசன் மகன் சஞ்சித் (23) என்பதும், சதீஷிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன், 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.