மயங்கி விழுந்த முதியவர் சாவு

மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-02-04 17:20 GMT
கரூர்
நொய்யல்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிபாளையம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 63). இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்