முககவசம் அணியாத 995 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 995 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-01-12 12:01 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத 995 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அதன்படி பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்கள், கொரோனா விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
முககவசம் அணியாத...
இதுதவிர பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றதாக, தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 206 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 146 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 126 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 55 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 112 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 238 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 66 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 46 பேர் மீதும் ஆக மொத்தம் 995 பேருக்கு ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.2 லட்சத்து 1000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்