வேகத்தடையை அமைக்கப்படுமா

வேகத்தடையை அமைக்கப்படுமா

Update: 2022-01-12 10:39 GMT
வேகத்தடையை அமைக்கப்படுமா
வெள்ளகோவில்-முத்தூர் ரோட்டில் கமலா மில் பஸ் நிறுத்தம் மற்றும் அய்யனூர் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் வரும் வாகனங்கள் மிக மிக வேகமாக வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. எனவே வெள்ளகோவில் முத்தூர் சாலை கமலா மில் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
டாக்டர் இல்லாத அவசர சிகிச்சை பிரிவு 
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு  அவசரம் என்று சென்றால் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை. செவிலியர்களிடம் கேட்டால் முறையான பதில் சொல்வது இல்லை. அவசரபிரிவுக்கு வருபவர்களின் உயிர் பிழைக்க குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை முக்கியம். ஆனால் ஆபத்தில் வருவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாமல் இருப்பது கவலை அளிக்க கூடியது. எனவே அவசர பிரிவில் டாக்டர்கள் பணியில் இருக்கிறார்களா என கண்காணிப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. இது குறித்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனநோயாளிகளின் உறவினர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
திருப்பூர் மண்ணரைபகுதியில் குடிநீர் வினியோகம் செய்து  10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இது வரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதப்படுகிறார்கள். எனவே நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்