பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-01-12 10:34 GMT
காங்கேயத்தில் படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து போலீசார் கூறியதாவது
பள்ளி மாணவி
 காங்கேயம்  உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் தண்டீஸ்வரன். இவருடைய  மகள் பவதாரணி வயது 16. இவர் காங்கேயம் அருகே வரதப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இந்தநிலையில் பவதாரணி தனக்கு படிப்பு வரவில்லை என்றும், இதனால் பள்ளி செல்ல விருப்பம் இல்லை என்றும் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். 
அதற்கு பவதாரணியின் பெற்றோர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் பவதாரணி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதற்கிடையில் வெளியில் சென்ற பவதாரணியின் சகோதரன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பவதாரணி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். 
போலீசார் விசாரணை
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பவதாரணியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கார் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பவதாரணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயத்தில் பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்