பாவூர்சத்திரத்தில் பீடிக்கடை முன்பு பெண்கள் போராட்டம்

பாவூர்சத்திரத்தில் பீடிக்கடை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-11 22:52 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் - செட்டியூர் சாலையில் தனியார் பீடி கடை உள்ளது. இந்த கடையில் பாவூர்சத்திரம், செட்டியூர், பஞ்சபாண்டியூர் ஊர்களில் இருந்து பெண்கள் பலர் பீடிசுற்றி வருகின்றனர். இங்கு பீடி சுற்றும் பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை என்றும், தரமான இலை, தூள் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடை முன்பு நேற்று பீடி சுற்றும் பெண்கள் பலர், பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி தர்மக்கனி, பொருளாளர் ஆரிய முல்லை ஆகியோர் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்திற்கு மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் ஆகியோர் விரைந்து வந்து கடை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்