வைக்கோல் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்தது
வைக்கோல் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்தது
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை. விவசாயியான இவரது தோட்டத்தில் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்த நிலையில் அதில் கிடைத்த வைக்கோல்களை வாடிப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு விற்பனை செய்தாக கூறப்படுகிறது.
முத்துப்பாண்டி தனது வேன் மூலம் வைக்கோல்களை ஏற்றிக் கொண்டு வயல்வெளியில் உள்ள சாலை வழியாக மெயின் ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளியில் உள்ள சாலையின் குறுக்கே சென்ற மின் வயரில் உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. பொதுமக்கள் உதவியுடன் தீயிணை கட்டுப்படுத்த முயன்றும் தீ தொடர்ந்து எரிந்தது. இதையடுத்து உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் தீயினை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து வாலாந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.