கள்ளக்காதலியிடம் பணம் பறித்த சித்தா டாக்டர் கைது

நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி கள்ளக்காதலியிடம் பணம் பறித்த சித்தா டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-11 20:49 GMT
தஞ்சாவூர்;
நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி கள்ளக்காதலியிடம் பணம் பறித்த சித்தா டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சித்தா டாக்டர்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் செல்வபிரசாத்(வயது 31). சித்தா டாக்டரான இவர், அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். இவரது கிளினிக்கிற்கு கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சையை சேர்ந்த திருமணம் ஆன பெண் சிகிச்சைக்காக வந்தார்.
கள்ளக்காதல்
அந்த பெண் சித்தாடாக்டரின் கிளினிக்கிற்கு அடிக்கடி வந்ததால், அந்த பெண்ணுக்கும், சித்தா டாக்டர் செல்வபிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பயன்படுத்தி செல்வபிரசாத் அடிக்கடி அந்த பெண்ணிடம் பணம் பெற்று வந்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் செல்வபிரசாத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு பணம், நகை வேண்டும் என்று அந்த பெண்ணிடம் செல்வபிரசாத் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், தன்னிடம் பணம் மற்றும் நகை இல்லை என கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வபிரசாத், நீ பணம் தராவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருந்த படம், வீடியோக்களை  சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்