கார் மோதி விவசாயி பலி
கமுதி அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கமுதி,
கமுதி அருகே கீழக்கொடுமலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (வயது53). இவர் அபிராமத்தில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கிடாத்திருக்கையை சேர்ந்த திருநாவுக்கரசு (32) என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந் தார். இது குறித்த புகாரின்பேரில் அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.