கோத்தகிரி அருகே மினி பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கோத்தகிரி அருகே மினி பொக்லைன் எந்திரம் பறிமுதல்

Update: 2022-01-11 15:14 GMT
கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாக உள்ளதாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் அங்கு அனுமதி இல்லாமல் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி பயன்படுத்தும் பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் கேர்கம்பை கிராமத்தில் அருகே உரிய அனுமதி பெறாமல் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மினி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி வருவதாக கோத்தகிரி வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து வருவாய் ஆய்வாளர் வேல்மயில், கிராம நிர்வாக அலுவலர் சத்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது உரிய அனுமதி பெறாமல் மினி பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. 

இதையடுத்து அந்த மினி பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட ஒரு மினி பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்