பொள்ளாச்சியில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

பொள்ளாச்சியில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2022-01-11 14:09 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

பழுதாகி நின்றது

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் செல்லாண்டிகவுண்டன்புதூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கோவை-பொள்ளாச்சி ரோட்டில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் வந்ததும் பஸ் திடீரென்று பழுதாகி நின்றது. டிரைவர் பலமுறை பஸ்சை ஆன் செய்து பார்த்தும் முடியவில்லை. இதையடுத்து பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதையடுத்து சில பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகளை மட்டும் வேறு பஸ்சில் ஏற்றி விட்டனர். இதையடுத்து அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சை நிறுத்தி பேட்டரியில் ஒயரை இணைத்து பார்த்தும் பயன் இல்லை. இதை தொடர்ந்து பஸ்சின் பின்புறம் தள்ளியப்படி சிறிது தூரம் சென்ற பிறகு ஸ்டார்ட் ஆனது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆய்வு செய்ய வேண்டும்

அரசு டவுன் பஸ்களில் பெண்களில் இலவசமாக செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சி பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகின்றன. இதனால் அரசு பஸ்களை நம்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏதாவது ஒரு பஸ் நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது.
போக்குவரத்திற்கு தகுதி இல்லாத பஸ்களை தொடர்ந்து இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்து உள்ளது. எனவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற போக்குவரத்திற்கு தகுதி இல்லாத பஸ்களை கண்டறிந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்