முககவசம் அணியாத 313 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 313 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி விதிமுறைகளை மீறிய 22 பேர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதே போன்று பொது இடங்களில் முககவசம் அணியாத 313 பேருக்கு மொத்தம் ரூ.63 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.