பயிற்சி பெண் பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி பெண் பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-10 20:38 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் பிரசிதா (வயது 24). இவர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பல் டாக்டராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இரவு பிரசிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றார். மறுநாள் காலை அவருடைய பெற்றோர் எழுந்து பார்த்தபோது பிரசிதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் அரசு ஆஸ்பத்திரி பெண் பயிற்சி பல் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்