வீட்டில் பதுங்கி இருந்த மரநாய் பிடிபட்டது

வீட்டில் பதுங்கி இருந்த மரநாய் பிடிபட்டது

Update: 2022-01-10 19:59 GMT
கன்னியாகுமரி, 
கொட்டாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது  வீட்டின் மாடியில் ஒரு மரநாய் 4 குட்டிகளுடன் பதுங்கி இருந்தது. இதுகுறித்து அவர் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனக்காப்பாளர் பிரபாகர், அர்ஜூனன், வேட்டைத் தடுப்பு காவலர் பிரவின் ஆகியோர் விரைந்து சென்று மரநாய் மற்றும் 4 குட்டிகளை பிடித்து உதயகிரிகோட்டை வனஉயிரியல் பூங்காவில் கொண்டு விட்டனர். கடந்த மாதம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரநாய் ஒன்று பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்