விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனுக்கு கொரோனா

விருதுநகர் எம்.எல்.ஏ.வான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-01-10 19:37 GMT
விருதுநகர், 
விருதுநகர்  எம்.எல்.ஏ.வான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
விருதுநகர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (வயது 64), பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததால், அவருக்கு லேசான பாதிப்புதான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
வீட்டிலேயே தனிமை
இதையடுத்து, எம்.எல்.ஏ. சீனிவாசன், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் கலந்துெகாண்டார். கூட்டம் நடப்பதற்கு முன்பாக அவருக்கு எடுத்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்