மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் பெட்டி வைப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் மனுக்களை போட்டனர்.

Update: 2022-01-10 17:27 GMT
புதுக்கோட்டை:
குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. 
அதன்படி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்களது குறைகளை, கோரிக்கைகளை தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் மற்றும் இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் பொதுமக்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை.
மனுக்கள் பெட்டி
பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டனர். பெட்டியில் போடப்பட்ட மனுக்களை அதிகாரிகள் பிரித்து அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்