கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 21 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 585 ஆகும். இதில் 43 அயிரத்து 783 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். 440 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உள்ளது.