பேரிகை அருகே அரிசி பாரம் ஏற்றி வந்த லாரி 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்

பேரிகை அருகே அரிசி பாரம் ஏற்றி வந்த லாரி 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2022-01-10 17:19 GMT
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை செங்கத்தை சேர்ந்த யுவராஜ் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். பேரிகை அருகே ராமன்தொட்டியில் காட்டுப்பகுதி வழியாக வந்த போது, வளைவில் பனிமூட்டம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  அருகில் இருந்த சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் நொறுங்கியது. மேலும், டிரைவர் யுவராஜுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.  இந்த விபத்து குறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை டிராக்டரில் ஏற்றினர். பின்னர், லாரி கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்