பழனியில் அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்

பழனியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2022-01-10 14:52 GMT
பழனி:
பழனி காமராஜர்நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி கோரி பழனியில் தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்