மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்லாண்டிபாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது ஆற்றுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய திருமாநிலையூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.