சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மாணவன் சாதனை
சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவனை பாராட்டினர்.
அருப்புக்கோட்டை,
கன்னியாகுமரியில் நடைபெற்ற சப்-ஜூனியர் மாணவ - மாணவிகளுக்கான 18-வது மாநில சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் பிரஜன் கலந்து கொண்டார். இதில் அவர் மான்கொம்பு வீச்சுப்போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவனை நாடார்கள் உறவின்முறை தலைவரும், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளி தலைவருமான சுதாகர், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன், பள்ளி முதல்வர், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.