பேரணாம்பட்டு அருகே குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி குட்டையில் மூழ்கி பலி
குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி குட்டையில் மூழ்கி பலி
பேரணாபேரணாம்பட்டு
பேரணாம்பட்டை அடுத்த எர்த்தாங்கல் ஏரிபட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகன் வேலு (வயது 28), கூலித்தொழிலாளியான அவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் நேற்று ஊரடங்கு என்பதால் மதியம் அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பழனி, பார்த்திபன், கோட்டீஸ்வரன், முருகன், ஜம்புலிங்கம், சூரியா ஆகியோருடன் பேரணாம்பட்டு அருகில் உள்ள பரவக்கல் ஜொன்னப்பாறை வனப் பகுதியில் உள்ள நீர்வற்றாத குட்டைக்கு சென்றார். நண்பர்களுடன் சேர்ந்து அவர் குட்டையில் குளித்தார்.
அதன் பிறகு இறைச்சி உணவை சமைத்து சாப்பிட்டனர். ேவலு தனது நண்பர்களிடம், தான் மீண்டும் குட்டையில் குளித்து விட்டு வருவதாக, கூறி சென்றார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் கரையில் உள்ள பாறை மீது அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். வேலு திடீரெனக் கால்தவறி 10 அடி ஆழ குட்டைக்குள் விழுந்து நீரில் மூழ்கினார்.
குளிக்கச் சென்றவர் திரும்பி வராததால் நண்பர்கள் குட்டைக்கு சென்று வேலுைவ தேடினர். அவரை காணாததால் மேல்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோட்டீஸ்வரன் மற்றும் போலீசாரும், பேரணாம்பட்டு தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு ெசன்று கிராம மக்கள் உதவியோடு தேடினர்.
குட்டையில் வளர்ந்திருந்த தாமரை கொடிகளிடையே சிக்கியிருந்த வேலுவை மாலை 3.30 மணியளவில் போராடி பிணமாக மீட்டனர். அவரின் உடலை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி ைவத்தனர். மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.