காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

கொரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

Update: 2022-01-09 18:56 GMT
வேலூர்

வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா முன்னிலை வகித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பாகாயம் போலீஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்டு சங்கரன்பாளையம், டோல்கேட் வழியாக சென்று தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே நிறைவடைந்தது. இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மஞ்சுநாதன் மற்றும் போலீசார் பலர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்