திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு போனது. இதுகுறித்து போலீசாா் விசாாித்து வருகின்றனா்.

Update: 2022-01-09 17:49 GMT

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள செம்மார் கிராமத்தில் தீப்பாஞ்சம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தர்மகர்த்தாவாக முருகன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கோவில் கதவுகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 

நேற்று காலை 11 மணிக்கு வந்து பார்த்த போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் கோவிலில் இருந்த  குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது. 

மேலும் கோவிலில் இருந்த  75 கிலோ எடையுள்ள பித்தளையால் ஆன, அம்மன் சிலையை காணவில்லை. மர்ம மனிதர்கள் அந்த சிலையை சிறிது தூரம் தூக்கி சென்று போட்டு  இருப்பது தெரியவந்து.

இதுபற்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்