தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 14 பேர் நேற்று வீடு திரும்பினர். தர்மபுரி மாவட்டம் முழுவதும் இதுவரை 29 ஆயிரத்து 161 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.