கணபதி
கோவை கணபதி சங்கனூர் ரோடு நேருஜி வீதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் சுவர்ணஸ்ரீ(வயது 18). பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாயார் கொடுத்த பணத்தை சுவர்ணஸ்ரீ தொலைத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவரை மாரியம்மாள் கண்டித்தார். இதில் மனமுடைந்த சுவர்ணஸ்ரீ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.