மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-01-09 16:18 GMT
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
ஆனைமலை


ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது85). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், சில காலமாகவே தங்கம்மாள் உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு இருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று தங்கம்மாள் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 இதுகுறித்த தகவலின் பேரில் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்".


மேலும் செய்திகள்