ஒரே நாளில் ரூ11 கோடிக்கு மது விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. முழு ஊரடங்கு என்பதால் மதுபிரியர்கள் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக மதுபானங்களை வாங்கி குவித்துள்ளனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. முழு ஊரடங்கு என்பதால் மதுபிரியர்கள் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக மதுபானங்களை வாங்கி குவித்துள்ளனர்.
முழு ஊரடங்கு
திருப்பூர் மாநகரில் 105 கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 248 டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மது பானங்கள் விற்பனை அதிகளவில் இருக்கும். அத்துடன் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் வழக்கத்தைவிட அதிக அளவில் மது விற்பனை நடைபெறுவது உண்டு
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விடுமுறை நாளான நேற்று முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்கள் தவிர, டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களையும் மூடவும் அரசு உத்தரவிட்டது.
ரூ.11 கோடிக்கு மது விற்பனை
அந்தவகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முழு ஊரடங்கு என்பதாலும், டாஸ்மாக் கடை இருக்காது என்பதாலும் மதுபிரியர்கள் நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர். இதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மொத்தம் ரூ.11 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
வழக்கமாக தினமும் சுமார் ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை மட்டுமே விற்பனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கின் காரணமாக முந்தைய நாளே மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை அதிக அளவில் வாங்கியதன் மூலமாக வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக ரூ.11 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.