26-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு
26-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நேற்று நடந்த 26- வது நாள் போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச் சாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாண்டியன், முருகன், கதிரேசன், போஸ், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண்கள், விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். செயலாளர் ஸ்டாலின் குமார் நன்றி கூறினார். முன்னதாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது, இந்த சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தேவையான நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.