வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சுகுளிரோட்டில் வசித்து வருபவர்குருசாமி. இவரது மனைவி கோசலை (வயது35). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் பசு மாடு வளர்த்து வந்தார். அந்த மாடு அந்தபகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. அதில் 40 அடியில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. அதில் அந்த மாடு தத்தளித்துக்கொண்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத் துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி பசுமாட்டை மீட்டனர்.