ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-01-08 19:36 GMT
அரியலூர்:

தமிழக அரசின் உத்தரவின்படி, 18-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 190 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 343 இடங்களிலும் நேற்று நடைபெற்றது. தற்போது புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் வந்தனர். மேலும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் இன்றைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதால் நேற்று, அவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் பலர் முகாமிற்கு வந்தனர். நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 7,136 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 14,147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்