புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-01-08 18:52 GMT
நாகை நகராட்சி கீரைக்கொல்லைத்தெரு 3-வது சந்தில் சாலை வசதி இல்லை. இந்த தெரு உள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், சாலை அமைக்கும் பணி அந்த தெரு முழுவதும் நடைபெறாமல் இருக்கிறது. குறிப்பாக கீரைக்கொல்லைத்தெரு 3-வது சந்தில் உள்ள பூச்சிமாதா கோவில் முதல் கடைமடை பகுதியான கழிவுநீர் சுத்திகரிக்கும் மையம் வரை 100 மீட்டருக்கு சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுபட்ட பகுதியிலும் தார் சாலை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி 85கிளியூர் வடக்கு தெருவில் பொதுமக்கள் வசதிக்காக கைப்பம்பு அமைக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்த நிலையில் கைப்பம்பு பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது. குறிப்பாக கைப்பம்பின் மேற்பகுதி உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் கைப்பம்பினை பயன்படுத்தி வந்த மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்கள், முதியவர்கள் போதிய தண்ணீர் வசதியின்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 85கிளியூர் வடக்கு தெருவில் உள்ள கைப்பம்பினை சீரமைக்க தர நடவடிக்கை எடுப்பார்களா


மயிலாடுதுறை நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைகள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவில் விஷப்பூச்சிகள் சுற்றிதிரிகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குப்பைகள் கிடப்பதால் அங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்