சென்னை ஒய்.எம்.சி.ஏ அணி சாம்பியன்

காரைக்குடி அருகே நடந்த கைப்பந்து போட்டியில் ஒய்.எம்.சி.ஏ. அணி சாம்பியன் பெற்றது.

Update: 2022-01-08 18:05 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் ஆண்கள் அணிக்கான கைப்பந்து போட்டி கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 இந்த போட்டியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ அணி, தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி அணி, கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லூரி அணி, நாகர்கோவில் கிறிஸ்டின் அணி உள்பட மொத்தம் 11 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் சென்னை ஒய்.எம்.சி.ஏ அணி, நாகர்கோவில் கிறிஸ்டின் அணி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி அணி மற்றும் சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி ஆகிய 4 அணிகளும் அரையிறுதி ஆட்டத்தில் மோதின. இதில் சென்னை ஓய்.எம்.சி அணியும், சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்று நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் விளையாடியது. இதில் சென்னை ஒய்.எம்.சி.ஏ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது பரிசை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணியும், 3-வது பரிசை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி அணியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கோவிலூர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் ரவீந்திரன் வரவேற்றார். 
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுந்தர் வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக செயலர் டாக்டர் கண்ணதாசன் உள்பட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். முடிவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் பெவின்சன்பேரின்பராஜ் நன்றி கூறினார்.
----------

மேலும் செய்திகள்