கொரோனா பரவல் அதிகரிப்பால் மேலும் 2 தெருக்கள் அடைப்பு
வேலூரில் கொரோனா பரவல் அதிகரிப்பால் மேலும் 2 தெருக்கள் அடைக்கப்பட்டன.
வேலூர்
வேலூர் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பரவல் மக்களிடையே அதிவேகமாக பரவுகிறது.
எனவே இதை தடுக்கும் வகையில் ஒரு பகுதியில் அதிகமானவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டால் அந்த பகுதி தனிமைப்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் அங்கு மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் பாதை தகரத்தால் அடைக்கப்படுகிறது. அதன்படி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை எதிரே உள்ள பாபுராவ் தெரு நேற்று முன்தினம் அடைக்கப்பட்டது.
இந்தநிலையில் சுக்கையாவாத்தியார் தெரு, லத்திப்பாஷா தெருவிலும் அதிக கொரோனா பரவல் இருந்ததால் நேற்று அந்த தெருக்களும் தகரத்தால் அடைக்கப்பட்டது.
அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.